கடலினுள் இறங்கி கடற்படையினர் தேடுதல் நடவடிக்கை

Report Print Gokulan Gokulan in சமூகம்

கிண்ணியா பகுதியில் உள்ள கரையோரங்களில் கடற் படையினர் கடலினுள் இறங்கி தேடுதல் நடவடிக்கையில் இன்று ஈடுபட்டுள்ளனர்.

கடல் நீரில் இறங்கி மிகவும் தீவிரமாக தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். கிண்ணியா துறையடி கரையோரம் முதல் பெரியாற்று முனை கரையோரம் வரையிலான பகுதிகளில் இவ்வாறான நடவடிக்கைகள் இடம் பெற்று வருகிறது.

படகு மூலமாக விசேட கடற்படையினர் சுழியோடுதல் மூலமாக தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளார்கள்.

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ் நிலை காரணமாக பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் நீரில் இறங்கி தேடுதல் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

இது தவிர இராணுவத்தினர் கிண்ணியாவில் உள்ள சில பகுதிகளில் வீதியோரங்களில் போக்குவரத்தின் போதான வாகனங்களை நிறுத்தி சோதனையில் ஈடுபடுவதுடன் தேசிய அடையாள அட்டையையும் பரிசோதிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers