இலங்கை வங்கி முகாமையாளரை அச்சுறுத்திய இராணுவத்தினரிடம் உயர் அதிகாரி விசாரணை

Report Print Mohan Mohan in சமூகம்

கிளிநொச்சி - பரந்தன் கிளை மக்கள் வங்கியில் பணிபுரியும் பெண் முகாமையாளர் ஒருவரை அச்சுறுத்திய இராணுவத்தினர் இன்று விசாரனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவை சேர்நத குறித்த வங்கி முகாமையாளர் கடந்த வெள்ளிக்கிழமை உத்தியோகத்திற்கு சென்ற வேளை புதுக்குடியிருப்பு பகுதியில் 68-2 படைப்பிரிவு இராணுவத்தினர் பயணப்பொதி சோதனை மேற்கொண்டதுடன் விசாரணை செய்துள்ளனர்.

இதன் காரணமாக அச்சமடைந்த குறித்த பெண் முகாமையாளருக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.