திடீர் ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு வந்ததன் காரணமாக பயணிகள் பாதிப்பு

Report Print Sumi in சமூகம்

நாடு முழுவதும் ஏற்பட்ட சில பதற்ற நிலை காரணமாக இன்று 9 மணிமுதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது.

இந் நிலையில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்துகள் அனைத்து இடைநிறுத்தபட்டதன் காரணமாக பொது மக்கள் எங்கு செல்வது என அறியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர் என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும் இதே போன்று வெளிமாவட்டத்திற்கு பயணத்தை மேற்கொண்டவர்களும் போக்குவரத்து வசதிகள் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.