உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து காத்தான்குடிக்குப் படையெடுக்கும் சர்வதேச ஊடகவியலாளர்கள்

Report Print Rusath in சமூகம்

கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்களையடுத்து சர்வதேச ஊடகங்களின் ஊடகவியலாளர்கள் பலர் காத்தான்குடிக்குப் படையெடுத்து. விவரங்களைத் திரட்டுவதை அவதானிக்க முடிகிறது.

குண்டு வெடிப்புத் தாக்குதலின் பிரதானி எனக் கூறப்படும் ஸஹ்ரானின் சொந்த ஊரான காத்தான்குடி சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளதால் காத்தான்குடிக்கு விஜயம் செய்யும் சர்வதேச ஊடகவியலாளர்கள் காத்தான்குடியின் வரலாற்றுப் பின்னணி, அவ்வூரில் நிலவி வரும் மத அடிப்படையிலான பிரிவுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை ஆய்வு செய்வதில் ஈடுபட்டுள்ளனர்.

ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் உடனடியாகவே காத்தான்குடிக்கு விஜயம் செய்த உலகப் பிரசித்தம் பெற்ற ஊடகங்களின் ஊடகவியலாளர்கள் பலர் ஏற்கெனவே சூட்டோடு சூடாக தமது அறிவுக்கெட்டியவரையில் காத்தான்குடியைப் பற்றிய பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு அவற்றை வெளிப்படுத்தியும் உள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

தற்போதும் பல சர்வதேச ஊடகவியலாளர்களால் காத்தான்குடியில் நிலவும் மார்க்க முரண்பாடுகளில் வஹாபிஸம், ஷீயா – சுன்னி கொள்கைகள், தரீக்கா வழிபாட்டு முறைகள், அஹமதியா நடவடிக்கைகள், காதியானி செயற்பாடுகள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன என தகவல் கிடைத்துள்ளது.

Latest Offers