600க்கும் மேற்பட்ட கடும்போக்கு முஸ்லிம்கள் நாடு கடத்தப்பட்டனர்!

Report Print Ajith Ajith in சமூகம்

கடந்த வாரங்களில் இலங்கையில் இருந்து 600க்கும் மேற்பட்ட கடும்கோட்பாட்டு முஸ்லிம்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இவர்களில் மௌலவிகளும் அடங்கியிருந்தனர். இவர்கள், இலங்கையில் உள்ள பள்ளிவாசல்களுடன் இணைந்து தீவிரவாதத்தை ஊக்குவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நாடு கடத்தப்பட்ட 600பேரில் 100 இந்தியர்களும் அடங்கியிருந்தனர். இந்தநிலையில் நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் தொடர்பில் இந்திய புலனாய்வுப்பிரிவினர் கண்காணிப்பை செலுத்தி வருகின்றனர்.

இதேவேளை இலங்கையில் குண்டுவெடிப்புக்களுக்கு காரணமாக இருந்தவர் என்றுக் கூறப்படும் ஸஹரான் ஹாசிம், குண்டுத்தாக்குதல்களுக்கு முன்னதாக மூன்று மாதங்கள், இந்தியாவில் தங்கியிருந்ததாக இந்திய ஊடகத்தகவல்கள் வெளியாகியுள்ளன.