வெள்ளத்தினால் பாதிக்கப்ட்ட குடும்பங்களுக்கு வீடுகள் வழங்க தீர்மானம்

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்ட்ட குடும்பங்களுக்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் வீடின்றி வாழும் மக்களுக்கான வீடுகளை வழங்கவும் மாதிரிக்கிராமங்களை உருவாக்கும் வகையில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் பல்வேறு வேலைத்திட்டஙகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளததினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான வீடுகளை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவின் கீழுள்ள புளியம் பொக்கணை, புன்னை நீராவி பிரமந்தனாறு ஆகிய கிரம அலுவலர் பிரிவுகளில்தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான புதிய வீடுகளை அமைப்பதற்கான அடிக்கல்நாட்டும் நிகழ்வுகள் மேற்படி பிரதேசங்களில் நடைபெற்றுள்ளது.

இதில் நாடாளுமன்ற உறுப்பின சிவஞானம் சிறிதரன் கலந்து கொண்டு புதிய வீடுகளுக்கான கட்டுமானப்பணிகளை ஆரம்பித்து வந்துள்ளனர்.

இதில் கண்டாவளை பிரதேச செயலர் ரீ. பிருந்தாகரன் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் தே.வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்களான கலைவாணி மற்றும் ஜீவராசா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.