இன்று குருணாகலில் ஏற்பட்ட வன்முறையில் தீயில் கருகிய சில பகுதிகள்!

Report Print Rakesh in சமூகம்

குளியாப்பிட்டி, பிங்கிரிய, தும்மலசூரிய, ஹெட்டிபொல, மடிகே, அனுக்கான, கொட்டாம்பிட்டிய, ரஸ்நாயக்கபுர மற்றும் கொபெய்கனே ஆகிய பகுதிகளில் முஸ்லிம்களின் பல வர்த்தக நிலையங்கள் சிங்கள வன்முறையாளர்களினால் இன்று அடித்து நொறுக்கப்பட்டன.

சில வர்த்தக நிலையங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. அதேவேளை, வீடுகள், வாகனங்களும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. பள்ளிவாசல்கள் தாக்கிச் சேதப்படுத்தப்பட்டன.

இந்நிலையில், குருணாகல் மாவட்டத்தில் இன்று வன்முறை ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது அங்கு மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers