அமெரிக்கா இஸ்ரேலின் வளர்ப்பு நாய்கள்தான் ஐ.எஸ் பயங்கரவாதிகள்

Report Print Nesan Nesan in சமூகம்

இலங்கையில் ஏற்பட்ட ஐ.எஸ் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் கொடூர தாக்குதலின் பின் மக்களிடையே ஒற்றுமையை சீர்தூக்க சர்வமதத்தலைவர்களின் ஊடக சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

குறித்த ஊடக சந்திப்பு இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

இன ஐக்கிய சம்மேளன ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சகல இனங்களையும் உள்ளடக்கிய ஐக்கியமாக வாழும் சமூகத்தை கட்டியெழுப்பும் நோக்கத்தோடு மத தலைவர்கள் ஒன்றிணைந்து ஊடக சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது உரையாற்றிய சர்வமதத்தலைவர்கள் சமாதானத்தை ஏற்படுத்த இவ்வாறு அரசாங்கத்திற்கு வலியுறுத்தினர்.

நாங்கள் ஒவ்வொருவரும் கடந்த உயிர்த்த ஞாயிறு இடம்பெற்ற கொடூர சம்பவத்தை மன்னித்து இதயசுத்தியுடன் செயற்பட வேண்டும் இனிவரும் காலங்களில் வதந்திகள் மூலம் கலவரங்கள் பரவாவண்ணம் பாத்துக்கொள்ள வேண்டும்.

யுத்தகாலங்களில் கூட வணக்கஸ்த்தலங்களில் நிம்மதியுடன் வணக்க வழிபாட்டுக்களை மேற்கொண்டு வந்தனர். ஆனால் இன்று சுபீட்ச்சமான வழிபாட்டினை மேற்கொள்ள அச்சப்பாங்குடனே மத ஸ்தலங்களுக்கு வழிபாட்டினை மேற்கொள்ளவேண்டியிருப்பதாக சுட்டிக்காட்டினர்.

நான்குமதங்களின் சங்கமமாக இருக்கும் கல்முனை பிரதேசத்தில் நாம் இலங்கையர் எனும் அடிப்படையில் சமாதானத்தை நிலைநாட்ட ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டிய மதத்தலைவர்களாக இருக்கின்றோம்.

கத்தோலிக்க தேவாலங்களிலும், நட்சத்திர விடுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலின்பின் சிங்கள, தமிழ், முஸ்லிம், மக்களின் இயல்பு நிலைதான் பாதிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகள் சிங்களவர்களாக இருந்தாலும், தமிழர்களாக இருந்தாலும், முஸ்லிம்களாக இருந்தாலும் பயங்கரவாதிகள்தான். தாக்குதல் நடத்தியவர்கள் முஸ்லிங்களாக இருந்தாலும் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் ஓரம்கட்டிவிடகூடாது.

எம்மிடையே நல்ஒற்றுமையை வளக்க வேண்டுமெனில் இறக்காமம் மாணிக்க மடு பௌத்த தேவாலயத்தையும் புனரமைப்பதனால் மேலும் எம்முள் சசோதரத்துவத்தை பேண முடியும்.

சர்வதேச சக்திகளே முஸ்லிம்களில் ஒருசில குழுக்களை தோற்றுவித்து ஒற்றுமையுடன் வாழும் மக்களைளிடையே முறுகல் நிலையை தோற்றுவிக்க முனைகின்றனர்.

இவ்வாறான பயங்கரவாத செயற்பாடுகளுக்கு இஸ்லாம் இடம்கொடுக்கவில்லை. இதனை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என சர்வ மதத்தலைவர்கள் வலியுத்தினர்.