வன்முறையால் நாத்தாண்டிய, மினுவாங்கொடையிலும் இருவர் பலி! கடைகள், வீடுகள் நாசம்

Report Print Rakesh in சமூகம்

புத்தளம் மாவட்டத்திலுள்ள நாத்தாண்டிய, கொட்டாரமுல்லைப் பகுதிகளிலும், கம்பஹா மாவட்டத்திலுள்ள மினுவாங்கொடையிலும் சிங்கள வன்முறைக் கும்பல் இன்று அட்டகாசம் புரிந்துள்ளது.

கடைகள், வீடுகள் சிலவற்றை இந்தக் கும்பல் அடித்து நொறுக்கித் தீயிட்டுக் கொளுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல்களில் சிக்கி இருவர் பலியாகியுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொட்டாரமுல்லையைச் சேர்ந்த அமீர் என்பவரும், மினுவாங்கொடையைச் சேர்ந்த பௌசுல் ஹமீத் என்பவரும் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் எவையும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.