சமூக வலைத்தளங்களை கண்காணிக்க விசேட பிரிவு! பொலிஸ் ஊடக பேச்சாளர்

Report Print Murali Murali in சமூகம்

சமூக வலைத்தளங்கள் ஊடாக போலியானதும், இன முறுகல் மற்றும் இனங்களுக்கிடையில் குழப்பம் ஏற்படுத்தும் வகையிலான பிரசாரங்களை முன்னெடுப்போர் தொடர்பில் ஆராய விசேட பிரிவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர இதனை தெரிவித்துள்ளார். இந்த பிரிவு பொலிஸ் தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த நடவடிக்கையின் ஊடாக குற்றவாளிகளாக இனங்காணப்படும் நபர்களுக்கு 3 முதல் 7 வருட சிறைத் தண்டனை வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers