முஸ்லிம் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் இனவாத தாக்குதலின் பின்னணி! புலனாய்வு பிரிவு தகவல்

Report Print Vethu Vethu in சமூகம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூலம் நாட்டில் ஏற்பட்ட பயங்கரவாதம் அடையாளம் காணப்பட்டு முழுமையாக தோல்வியடைய செய்துள்ளதாக பாதுகாப்பு பிரிவினர் அறிவித்துள்ளனர்.

எனினும் சில அரசியல்வாதிகளின் தேவைகளுக்காக நாட்டில் இனக்கலவரங்களை ஏற்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

83ஆம் ஆண்டு கருப்பு ஜுலை போன்று ஏற்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதானிகள் நேற்று மாலை பிரதமரிடம் அறிவித்துள்ளனர்.

நேற்று மாலை பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் உள்ள கூட்டு நிலையத்தில் விசேட பாதுகாப்பு ஒன்றுகூடல் நடைபெற்றது.

இதில் பிரதமர் மற்றும் பிரதி பாதுகாப்பு அமைச்சர், முப்படைகளின் பிரதானிகள், பொலிஸ் பிரதானிகள் மற்றும் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதன்போது அரசியல்வாதிகளின் சதி நடவடிக்கை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு அவசர சட்டத்தின் கீழ் மேற்கொள்ள கூடிய முழுமையான அதிகாரத்தை பயன்படுத்துமாறு பிரதமர், பாதுகாப்பு பிரதானிகளுக்கு அறிவித்துள்ளார்.

அறிவிப்பினை மீறி வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டால், துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வதற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

83ஆம் ஆண்டு போன்ற இனவாத வன்முறையை கட்டவழித்த அரசியல்வாதிகள் மற்றும் குழுவினர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக சட்டத்தை செயற்படுத்துமாறும் பிரதமர், பாதுகாப்பு பிரிவுகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

வடமேல் மாகாணத்திலுள்ள முஸ்லிம் மக்களின் வர்த்தக நிலையங்கள், வீடுகள், பள்ளிவாசல்கள் என்பன காடையர் கூட்டத்தினால் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. பல வீடுகளுக்கு தீயும் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.