இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை மேலும் நீடிப்பு

Report Print Jeslin Jeslin in சமூகம்

இந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை மேலும் ஐந்து வருடங்களுக்கு நீடித்து இந்திய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 2024ஆம் ஆண்டு வரை குறித்த தடை நீடிக்கப்பட்டுள்ளது என த ஹிந்து குறிப்பிட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கங்கள் தனி ஈழம் அமைப்பதற்கான முயற்சியை தொடர்ந்து முன்னெடுக்கின்றன எனவும் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு அதிகரித்து வருவதால் தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்திய இறையாண்மைக்கு எதிரான செயல்கள், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்காமல் தடுக்க இவ்வாறு தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.