இன வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படும் நாமல் குமார கைது

Report Print Vethu Vethu in சமூகம்

ஊழல் எதிர்ப்பு முன்னணியின் இயக்குனர் நாமல் குமார குற்ற விசாரணை திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வரக்காபொல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதற்காக சென்ற சந்தர்ப்பத்தில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹெட்டிபொல பிரதேசத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது நாமல் குமார அங்கிருக்கும் காட்சி ஊடகங்கள் வாயிலாக வெளியாகி இருந்தன.

இங்கு நாமல் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாரிசிறி ஜயசேக்கரவுக்கு இடையில் கடும் வாக்குவாதம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நாமலை குமாரவை கைது செய்வதற்கு வரக்காபொல பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

ஹெட்டிபொல வன்முறை சம்பவத்தில் நாமல் குமாரவுக்கு தொடர்பு உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதேவேளை மினுவங்கொட நகரத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வர்த்தக நிலையங்களுக்கு தாக்குதல் மேற்கொண்டு பாரிய பாதிப்புகளை ஏற்படுத்திய 13 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடமேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் இதனை உறுதி செய்துள்ளார்.