தொடரும் பதற்றம் - மக்கள் உடமைகளுக்கு தீ வைப்பு! காலை நேர முக்கிய செய்திகள்

Report Print Sujitha Sri in சமூகம்

நாட்டில் கடந்த 21ஆம் திகதி எட்டு இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்து இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் நேற்றைய தினம் குருநாகல் மாவட்டத்தில் சில பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.

அத்துடன் மக்கள் உடமைகளுக்கு தீ வைக்கப்பட்டிருந்ததுடன், இந்த சம்பவம் காரணமாக வட மேல் மாகாணத்தில் மறு அறிவித்தல் வரும் வரையிலான ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டது.

இவை தொடர்பான செய்திகளை நாம் உடனுக்குடன் உங்களுக்கு தந்தவாறு உள்ளோம்.

இந்த நிலையில் எமது இணையத்தள பயனர்களுக்காக இது வரையான கால பகுதியில் பதிவாகிய செய்திகளில் முக்கிய இடம்பிடித்தவையை காணொளி வடிவில் தருகிறோம்.