நாட்டு மக்களுக்கு அவசர அழைப்பு விடுத்துள்ள குமார் சங்கக்கார

Report Print Jeslin Jeslin in சமூகம்

இனவெறி வேற்றுமையால் நாம் கண்களை மூடிக்கொண்டிருந்தால் நம் நாட்டையே நாம் இழக்க நேரிடும், எனவே அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அவசர அழைப்பொன்றை நாட்டு மக்கள் அனைவருக்கும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார விடுத்துள்ளார்.

நாட்டில் தற்போது வன்முறையுடன் கூடிய அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளமையால் இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் டுவிட்டர் வாயிலாக அவர் இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.

இலங்கை மக்களே ஒன்று சேருங்கள் என்றும், அனைவரும் கண்களை திறக்க வேண்டும் என்றும், வன்முறை, இனவெறி, வேற்றுமையால் நாம் கண்களை மூடிக்கொண்டிருந்தால் நம் நாட்டையே இழக்க நேரிடும் என அவர் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சமாதானமாக இருங்கள், மற்றவர்களையும் பாதுகாப்பாக வையுங்கள், பிரிவினையை ஏற்படுத்தும் அரசியல் வாதிகளின் சூழ்ச்சியை நாம் ஒன்றிணைந்து வீழ்த்த வேண்டும் எனவும், ஒரு நாடாக மீண்டும் மீண்டு வருவோம் எனவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.