கிளிநொச்சி மாவட்டத்தில் வேலைத்திட்டங்களுக்கான மதிப்பீ்ட்டு பணி ஆரம்பம்

Report Print Yathu in சமூகம்

2019ஆம் ஆண்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று வேலைத்திட்டங்களுக்கான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மீன்பிடித் துறையினை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இவ்வாண்டு மூன்று கடற்தொழில் பரிசோதகர் பிரிவுகளில் அபிவிருத்தி வேலைகளை முன்னெடுப்பதற்கான மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

கண்டாவளை - நாகேந்திரபுரம் பகுதியில் இரண்டு மில்லியன் ரூபாய் செலவில் பொதுமண்டபம் ஒன்றினை அமைப்பதற்கும், பச்சிலைப்பள்ளி - புலோப்பளை அறத்திநகர் கிராமத்தில் இரண்டு மில்லியன் ரூபாய் செலவில் மீளவர் ஓய்வு மண்டபம் ஒன்றினை அமைப்பதற்கும், நச்சிக்குடா - யாகப்பர் கிராமிய அமைப்பின் படகுத்துறை ஆழப்படுத்துவதற்கு இரண்டு மில்லியன் ரூபாய் தேவையென மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு அதற்கான அனுமதிகள் பெறப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தின் மீன்பிடித்தொழிலை அபிவிருத்தி செய்யும் வகையில் கடந்த ஆண்டுகளில் பல்வேறு அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...