இலங்கை வரலாற்றில் முதன்முறையாக முடக்கப்பட்டது டுவிட்டர் தளம்

Report Print Jeslin Jeslin in சமூகம்

இலங்கையில் முதன்முறையாக சமூக வலைத்தளங்களில் ஒன்றான டுவிட்டர் இன்று தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களின் ஊடாக தவறான மற்றும் இனங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்தும் வகையில் பகிரப்படும் கருத்துக்களை தவிர்ப்பதற்காகவே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்றைய தினம் முகநூல், வட்ஸ் அப், வைபர் மற்றும் யூடியூப் உள்ளிட்ட மேலும் சில சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.