ஹட்டன் செனன் பகுதியில் சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வந்த மூவர் கைது

Report Print Gokulan Gokulan in சமூகம்

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் - செனன், கே.எம் தோட்ட பகுதியில் மீன் வளர்ப்பு மேற்கொள்ளப்பட்டு வரும் கூடாரமொன்றில் சட்டவிரோதமாக கசிப்பு தயாரிப்பில் ஈடுபட்டு வந்த மூன்று சந்தேக நபர்களை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹட்டன் பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலுக்கு அமைய, ஹட்டன் குற்றதடுப்பு பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி பிரதீப் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது கசிப்பு தயாரிப்பதற்கு பயன்படுத்தபட்ட கேஸ் சிலின்டர் அடுப்பு, கசிப்பு தயாரிக்க பயன்படுத்தப்படும் ஸ்பிரீட் மற்றும் ஏனைய உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் இன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.