கடந்த காலப்பாடங்களை எதிர்கால சந்ததிக்கு மீதம் வைக்க வேண்டாம் - சனத் ஜயசூரிய

Report Print Steephen Steephen in சமூகம்

கடந்த காலத்தில் கற்றுக்கொண்ட பாடங்களை எதிர்கால சந்ததிக்கும் மீதம் வைக்க வேண்டாம் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்றமான நிலைமை தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

எமக்கு நாடு என்று இந்த சிறிய இலங்கை மாத்திரமே இருக்கின்றது. வன்முறைகள் மூலம் இந்த நாட்டில் பிரச்சினைகள் ஏற்பட்டால், இலங்கை மக்களாகிய நாமே பலவீனமடைவோம்.

பல தசாப்தங்களாக அனுபவித்த துன்பங்களில் பாடங்களை கற்ற நாம், எமது எதிர்கால சந்ததிக்கும் இந்த அழிவான அனுபவங்களை மீண்டும் மீதம் வைக்கக் கூடாது எனவும் சனத் ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.