இனவாதத்தில் இருந்து மீளுங்கள்! திமுத் கருணாரத்ன

Report Print Steephen Steephen in சமூகம்

இலங்கை என்ற எமது நாட்டை தயவு செய்து அழித்து விடாதீர்கள் என இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ள அவர், இனவாதத்தில் இருந்து மீளுங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார்.

இது எமது நாடு. தயவு செய்து இலங்கையை அழிக்க வேண்டாம். நாம் ஒருவருக்கு ஒருவர் பகையாக செயற்பட்டால், நாடு என்ற வகையில் நாம் எப்போதும் முன்னேற முடியாமல் போகும்.

உங்களது பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி சிந்தியுங்கள். உங்களது தற்போதைய செயற்பாடுகளிலேயே எமது எதிர்காலம் தங்கியிருக்கின்றது.

அன்பை பரவ செய்யுங்கள். இனவாதத்திற்கு எதிராக குரல் கொடுங்கள்” என திமுத் கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை தனது டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக பதிவு ஒன்றை இட்டுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேலே ஜயவர்தன, அரசியல் இலாபங்களுக்காக மக்களின் உயிர்களுடன் விளையாடுவதை நிறுத்துங்கள் எனக் கூறியுள்ளார்.

எண்ணங்களுக்கு அல்ல அறிவுக்கு இடம்கொடுப்போம். 1983 ஆம் ஆண்டில் போன்று இனவாத வன்முறை ஏற்படுத்த இடமளிக்க வேண்டாம். எவரும் பதற்றத்தை ஏற்படுத்தினால், அவர் அடிப்படைவாதி, நாட்டை கீழ் நோக்கி கொண்டு செல்வதே அவரது தேவை” எனவும் ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.