கிழக்கில் சைவ சமயத்தவர் இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர் - சிவ சேனை அமைப்பு

Report Print Steephen Steephen in சமூகம்

கிழக்கு மாகாணத்தில் தமிழ் சைவ சமயத்தவர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாற்றும் வேலைத்திட்டம் ஒன்று துரிதமாக முன்னெடுக்கப்பட்டிருந்தாக வடக்கில் செயற்படும் சிவ சேனை அமைப்பு தெரிவித்துள்ளது.

வறுமை கோட்டின் கீழ் வரும் பெரும்பாலான சைவ சமயத்தவர்கள் பலவந்தமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

அண்மையில் தற்கொலை தாக்குதல் நடத்திய நபர் திருமணம் செய்திருந்த சாரா என்ற புலஸ்தினி மகேந்திரன் இவ்வாறு இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டவர் என சிவ சேனை அமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் ஸ்ரீ சிவசுப்ரமணிய குருக்கள் குற்றம் சுமத்தியுள்ளார்.

திருமண யோசனைகளை முன்வைப்பது, வீடுகளை கட்டிக்கொடுப்பது மற்றும் வேறு வசதிகளை வழங்கி கிழக்கு மாகாணத்தில் பெரும்பாலான தமிழ் சைவ பெண்கள், இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

போர் நடைபெற்ற காலத்தில் பல தமிழ் பெண்கள் தமது பாதுகாப்புக்காக இஸ்லாம் சமயத்தை தழுவி, முஸ்லிம் பெயர்களை சூட்டிக்கொண்டனர்.

இஸ்லாம் சமய அடிப்படைவாதிகள் இந்த பெண்களை பல்வேறு குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தியுள்ளனர். இந்த பெண்கள் ஊடாக அடிப்படைவாதிகள் தமக்கு பாதுகாப்பை ஏற்படுத்திக்கொண்டனர்.

கிழக்கு மாகாணத்தில் இஸ்லாம் சமயத்திற்கு மாற்றப்பட்ட பெண்கள் சம்பந்தமாக தேடிப்பார்க்க வேண்டும் எனவும் சிவசுப்ரமணிய குருக்கள் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers