யாழில் தமிழின படுகொலை தினம் அனுஸ்டிப்பு

Report Print Sumi in சமூகம்

யாழ்ப்பாணம் - செம்மணி பகுதியில் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜலிங்கம் தலைமையில் தமிழின படுகொலை தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1996ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஆட்சி காலத்தின்போது, இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குழி மாணவி கிரிசாந்தி குமாரசுவாமி உட்பட அவரது உறவினர்களுக்கு இதன்போது அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இதில் வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க. சுரேஸ் பிரேமசந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.