காத்தான்குடி பகுதியில் இரண்டு கைக்குண்டுகள் மீட்பு

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கர்பலா கிராமத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன.

குறித்த கைக்குண்டுகள் கர்பலா கிராமத்தில் உள்ள குப்பை தொட்டியில் பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைக்கப்பட்ட நிலையில் இன்று மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியல் பிரிவு பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான பொலிஸ் குழுவினரும், விசேட அதிரடிப்படையினர் மற்றும் காத்தான்குடி பொலிஸாரும் இணைந்து இரண்டு குண்டுகளையும் செயலிழக்க செய்துள்ளனர்.

மேலும் குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்தபோதிலும் வேறு எந்த பொருட்களும் மீட்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த குண்டுக்களை செயலிழக்கச் செய்யப்பட்டதினை தொடர்ந்து ஆரையம்பதி,காத்தான்குடி பகுதியில் மக்கள் மத்தியில் பதற்ற நிலை நிலவியுள்ளது.எனினும் குறித்த குண்டுகள் செயலிழக்கச் செய்யப்பட்டமையினாலேயே வெடிப்பு சத்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

Latest Offers