இரண்டு மணி நேரம் தளர்த்தப்பட்டுள்ள வடமேல் மாகாணத்திற்கான ஊரடங்குச் சட்டம்

Report Print Jeslin Jeslin in சமூகம்

வடமேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் 2 மணித்தியாளங்கள் தளர்த்தப்படவுள்ளது.

அதன்படி இன்று மாலை 04 மணி முதல் 06 மணிவரை இவ்வாறு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் இன்று மாலை 06 மணியிலிருந்து நாளை காலை 06 மணி வரை வடமேல் மாகாணத்தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும்.

குறித்த மாகாணத்தில் நேற்று மாலை முதல் மறு அறிவித்தல் வரும் வரையில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது அது இரண்டு மணித்தியாலங்கள் தளர்த்தப்பட்டுள்ளது.