கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடம் நாளை ஆரம்பம்

Report Print Rusath in சமூகம்

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடம் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அப்பல்கலைக் கழகத்தின் பதில் பதிவாளர் ஏ.பகீரதன் தெரிவித்துள்ளார்.

சௌக்கிய பராமரிப்பு பீடத்தின் மருத்துவ துறையில் 2012-13, 2013-14, 2014-15 மற்றும் 2015-16 பிரிவுகளும், தாதியர் துறையில் 2012-13, 2013-14, 2014-15, 2015- 16 மற்றும் 2016-17 பிரிவுகள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளன.

சௌக்கிய பராமரிப்பு பீடத்தின் மருத்துவ துறையில் 2016-17 மற்றும் 2017-18 பிரிவு தாதியர் துறையில் 2017-1816-17 பிரிவு ஆகியன எதிர்வரும் திங்கட்கிழமை (20) ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சித்திரைப் புத்தாண்டு விடுமுறையின் பின்னர் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில், நாட்டில் பல பாகங்களிலும் இடம்பெற்ற தற்கொலைக் குண்டு தாக்குதலினை தொடர்ந்து கற்றல் நடவடிக்கைகள் மறு அறிவித்தல் வரும் வரை பிற்போடப்பட்டிருந்தது.

எனினும், கடந்த சில தினங்களுக்கு முன்னர் பல்கலைக் கழக வளாகம் பாதுகாப்புத் தரப்பினரால் சோதனையிடப்பட்டு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து இப்பீடத்தின் கற்றல் நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.