அந்தோனியார் தேவாலயத்தில் தாக்குதல் நடத்தியவரின் மரபணு பெற்றோரின் மரபணுவுடன் ஒத்து போகிறது

Report Print Steephen Steephen in சமூகம்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல் நடத்திய அலாதீன் அஹமட் முஹான் என்பவரின் மரபணு, அவரது பெற்றோரின் மரபணுவுடன் ஒத்திருப்பதாக சட்ட வைத்திய அதிகாரி, கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்கொலை குண்டுதாரியின் தலை தமது மகனுடையது என தாம் சட்ட வைத்திய அதிகாரியின் அலுவலகத்தில் அடையாளம் காட்டியதாகவும் அலாவுதீன் அஹமடின் பெற்றோர் நீதவான் முன்னிலையில் இன்று தெரிவித்துள்ளனர்.

தற்கொலை குண்டுதாரி மரணம் தொடர்பான விசாரணைகள் இன்று நீதிமன்றத்தில் நடைபெற்ற போது இந்த விடயங்கள் தெரியவந்தன.