ஜோர்தானில் காணாமல் போன இலங்கை பெண்

Report Print Steephen Steephen in சமூகம்

ஜோர்தானில் வீட்டுப் பணிப்பெண்ணாக தொழிலுக்கு சென்றிருந்த நிலையில் காணாமல் போன டி.டி. துஷாரி மாலா என்ற பெண் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் பொது மக்களின் உதவியை கோரியுள்ளது.

துஷாரி என்ற இந்த பெண் கடந்த 1997 ஆம் ஆண்டு ஜோர்தான் சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்த பெண் பற்றிய தகவல் அறிந்தால், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் 0112-864136 என்ற தொலைபேசி எண்ணுடன் தொடர்புக்கொண்டு அறிவிக்குமாறு பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது.

கடந்த 22 ஆண்டுகளாக இந்த பெண் பற்றி எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.