காத்தான்குடியில் பள்ளி வாசலுக்கு எதிரில் ஆயுதங்கள் மீட்பு

Report Print Steephen Steephen in சமூகம்

மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தில் முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றுக்கு எதிரில் உள்ள களப்பில் இருந்து ரி 56 ரக துப்பாக்கி உட்பட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இராணுவத்தினருக்கு கிடைத்த புலனாய்வு தகவல் ஒன்றின் அடிப்படையில் குருக்கள்குளம் இராணுவ மின் களப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை கைப்பற்றியுள்ளனர்.

ரி.56 ரக துப்பாக்கி, அதற்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்கள், 4 ரவை கூடுகள், மூன்று கத்திகள், தொலைநோக்கி, ரி.56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 136 தோட்டாக்கள் என்பவற்றை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர்.

இராணுவ முகாமுக்கு பொறுப்பான மேஜர் உட்பட இராணுவத்தினர் இந்த தேடுதலை நடத்தியுள்ளனர். கைப்பற்றிய ஆயுதங்களை இராணுவத்தினர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.