அடுத்த வருடம் ஐ.எஸ் அமைப்பின் தலைவர் கொல்லப்படுவார்! பேராசிரியர் ரொஹான் குணரட்ன

Report Print Jeslin Jeslin in சமூகம்

ஐ.எஸ். இன் தலைவர் அபூபக்கர் அல் பாக்தாதி, ஈராக் - சிரிய எல்லையை தளமாகக் கொண்டவர். எதிர்வரும் ஆண்டில் அவரும் கொல்லப்படுவார் என சர்வதேச கற்கைகள் கல்லூரியின் பாதுகாப்பு கற்கைத்துறை பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

ஐ.எஸ். அமைப்பின் இலங்கை கிளைத் தலைவராக ஷஹ்ரான் இருக்கின்றார். உயிர்த்த ஞாயிறு தினத்தில் கொழும்பு ஷங்ரில்லா ஹோட்டலில் மேற்குலகத்தவரை கொல்லும் நோக்கில் தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்றது.

அவர் அதில் இறந்திருந்தார். இலங்கை கிளைக்கும் தலைமை தாங்க ஐ.எஸ். மத்திய ஸ்தானத்தில் அவர் நியமிக்கப்பட்டார்.

அவரை பின்பற்றக்கூடியவர்களுக்கு அவரின் நியமனம் குறித்த அறிவித்தல் அடிக்கடி பதிவாகியிருந்தது.

இந்நிலையில், ஐ.எஸ். இன் தலைவர் அபூபக்கர் அல் பாக்தாதி, ஈராக் - சிரிய எல்லையை தளமாகக் கொண்டவர். எதிர்வரும் ஆண்டில் அவரும் கொல்லப்படுவார் என குறிப்பிட்டுள்ளார்.