கல்முனையில் ஏற்பட்ட குழப்பநிலை! பெருமளவான இராணுவம் குவிப்பு

Report Print Nesan Nesan in சமூகம்

கல்முனையில் சற்று முன்னர் இஸ்லாமியர் ஒருவர் அப்பகுதி இளைஞர்களால் தாக்கப்பட்டதை அடுத்து அங்கு பதற்றமான சூழல் தோன்றியுள்ளது.

இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினர் கல்முனையில் உள்ள அனைத்து வீதிகளிலும் தற்போது ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று மாலை கல்முனையில் இளைஞர்கள் தங்களது பிரதேசத்தில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வீதியால் வந்த இஸ்லாமியர் அந்த இளைஞர்களை விசாரித்துவிட்டுச் சென்றுள்ளார்.

அதன் பின்னர் சற்று தொலைவில் சென்று ஏன் அந்த இளைஞர்கள் அங்கு நிற்கின்றனர் என பிறரிடத்தில் வினவிய போதே அந்த இஸ்லாமியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து கல்முனையில் பல வீதிகளிலும் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.