நீதிபதி இளஞ்செழியனுடைய தகப்பனாரின் பூதவுடல் வேலணையில் தகனம் செய்யப்பட்டுள்ளது

Report Print Dias Dias in சமூகம்

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் தகப்பனார் சதாசிவம் மாணிக்கவாசகரின் பூதவுடல் இன்று வேலணையில் தகனம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் யாழ்ப்பாணம் - கொக்குவில், கேணியடியிலுள்ள அன்னாரின் புதல்வரான யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் இளம்பிறையனின் இல்லத்தில் சதாசிவம் மாணிக்கவாசகரின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

இதேவேளை இன்று காலை 8.00 மணிக்கு இறுதிக்கிரியைகள் செய்யப்பட்டு, பூதவுடல் அவர் பிறந்த இடமான வேலணைக்கு எடுத்து செல்லப்பட்டு, ஒரு சில மணித்தியாலங்கள் அங்கு மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின் சாட்டி இந்து மயானத்தில் தகன கிரியைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers