பொது மக்களை சந்தித்த அமைச்சர்

Report Print Mubarak in சமூகம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், குருணாகல் பகுதியில் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டதுடன் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் மக்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

குருநாகல் மாவட்டத்தில் இனவாதக் குழுக்களின் தாக்குதலுக்குள்ளான ஹெட்டிபொல, கொட்டம்பாபிடிய, பண்டாரகொஸ்வத்த, மடிகே, அனுக்கன, கிணியன, பூவல்ல, அஸனாகொடுவ, கல்ஹினியாகடுவ போன்ற பிரதேசங்களுக்கு இன்று விஜயம் மேற்கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், அங்கு பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டதுடன் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் மக்களுடன் கலந்துரையாடினார்.

இந்த விஜயத்தின் போது இராஜாங்க அமைச்சர்களான பைசால் காசிம், அலிசாஹிர் மெளலானா, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் றிஸ்வி ஜவஹர்சாவும் கலந்துகொண்டார்கள்.

இதன் போது அப்பிரதேச பொது மக்களின் கருத்துகளின் கருத்துக்ளையும் கேட்டறிந்துள்ளார்.

Latest Offers