மது போதையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டவருக்கு சிறைதண்டனை

Report Print Mubarak in சமூகம்

சாராயம் குடித்து விட்டு வீதியில் நின்று ஒழுங்கீனமாக நடந்து கொண்ட ஒருவருக்கு ஒரு மாதம் சிறைதண்டனை வழங்கப்பட்டுள்ளது.

திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சாராயம் குடித்து விட்டு வீதியில் நின்று ஒழுங்கீனமாக நடந்து கொண்ட ஒருவருக்கு ஒரு மாதம் சிறைதண்டனை விதித்து மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் இன்றைய தினம் உத்தரவிட்டுள்ளார்.

தங்கநகர், கிளிவெட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கே இவ்வாறு தண்டனை விதித்துள்ளார்.

குறித்த நபர் சாராயம் குடித்து விட்டு வீதியில் நின்று ஒழுங்கீனமாக நடந்து கொண்டதோடு, வீதியால் செல்வோருக்கும் தகாத வார்த்தை பிரயோகங்களையும் கொண்டுள்ள நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்து பொலிஸார் மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே எட்டாயிரம் ரூபாய்தண்ட பணம் செலுத்துமாறும் அத்தொகையை செலுத்தத் தவறும் பட்சத்தில் ஒரு மாதம் சிறைதண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

Latest Offers

loading...