வவுனியாவில் பள்ளிவாசலுக்கு முன்பாக மர்ம பொதி! பொலிஸாரும், இராணுவத்தினரும் சுற்றிவளைப்பு

Report Print Theesan in சமூகம்

வவுனியா - சாளம்பைக்குளம் பள்ளிவாசலுக்கு முன்பாக உள்ள பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட மர்ம பொதி காரணமாக அங்கு சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

சாளம்பைக்குளம் பள்ளிவாசலை அண்மித்துள்ள பாலத்தின் அருகே கைவிடப்பட்ட நிலையில் மர்ம பொதியொன்று காணப்படுவதாக பூவரசங்குளம் பொலிஸாருக்கு நேற்றிரவு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து அப்பகுதியூடான போக்குவரத்தை முடக்கி குறித்த பொதி தொடர்பில் கடும் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது அந்த பொதியில் மறைத்து வைக்கப்பட்ட நிலையிலிருந்த நான்கு கூரிய வாள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதையடுத்து சம்பவம் தொடர்பில் நேற்று இரவு பொலிஸாரும், இராணுவத்தினரும் அப்பகுதியில் சுற்றிவளைப்பினை மேற்கொண்டிருந்த போதும் இது தொடர்பில் யாரும் கைது செய்யப்படவில்லை என தெரியவருகிறது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார், இராணுவத்தினருடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers