நாத்தாண்டியவில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் - ஒருவர் உயிரிழப்பு - 31 பேர் கைது

Report Print Vethu Vethu in சமூகம்

நாத்தாண்டிய பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கொட்டராமுல்ல, மொரகெலே பிரதேசத்தில் நேற்று இரு தரப்பினருக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. இது தொடர்பில் பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுக்க முற்பட்ட வேளையில் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.

நேற்று இடம்பெற்ற இந்த மோதலில் வெட்டுக்காயமடைந்த நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த நபர் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரு குழுக்குளுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக அந்தப் பகுதியிலுள்ள 6 வீடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்கு கொஸ்வத்தை பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்ளும் போது, அதற்கு கடுமையான எதிர்ப்பு வெளியிட்டமையினால் அங்கு பதற்ற நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது.

வன்முறை சம்பவம் தொடர்பில் இதுவரை 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அந்தப் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு வழங்கி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest Offers