மாலபே நெவில் பெர்னாண்டோ மருத்துவமனை தொடர்பில் வழங்கப்பட்டுள்ள சாட்சியம்

Report Print Satha in சமூகம்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே, மாலபே நெவில் பெர்னாண்டோ மருத்துவமனை தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு சாட்சி வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பேச்சாளர் கூறுகையில்,

மூன்று அமைச்சரவை பத்திரங்கள் ஊடாக மேற்படி மருத்துவமனையை அரசுடமையாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும் அதன் உரிமையாளர் குறித்த மருத்துவமனையை விற்பனை செய்வதற்கு பொது அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதாக ஹரித அலுத்கே குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்த சம்பவத்தின் பின்னால் சுகாதார அமைச்சர் உள்ளதாகவும் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார் என சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest Offers