இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதற்கு அமைச்சர் மனோ கணேசன் விளக்கம்! ஆங்கில ஊடகம்

Report Print Steephen Steephen in சமூகம்

இலங்கை சிங்கள பௌத்த நாடு என தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள் மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இலங்கை சிங்கள பௌத்த நாடு கிடையாதென அண்மையில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் மனோ கணேசன் இதனை கூறியுள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

நாம் ஒரே தேசத்தின் மக்கள் என்ற போதிலும் இது சிங்கள பௌத்த நாடாகும். இலங்கை சிங்கள பௌத்த நாடு அல்ல எனக்கூறுவது சரியானதாகாது.

இலங்கையில் பல்லின மக்கள் வாழ்ந்து வந்தாலும் சிங்கள பௌத்த நாடு என்பதனை ஒப்பு கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

Sri Lanka is a Sinhala Buddhist country: Mano


Latest Offers