யாழ். மூளாய் பகுதியில் குண்டுகளை செயலிழக்க செய்த இராணுவத்தினர்?

Report Print Dias Dias in சமூகம்

யாழ். மூளாய் பகுதியில் இரண்டு பாரிய குண்டு வெடிப்பு சத்தம் கேட்டுள்ளதோடு, அப்பகுதியில் உள்ள வீடுகளில் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதுடன், இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளதாக தெரியவருகிறது.

முதலாவது வெடிப்பு சம்பவம் பதிவாகிய பின்னர் மீண்டும் ஒரு பெரிய வெடிப்பு சத்தம் கேட்டுள்ளதோடு மூளாய், பித்தனை சுடலை பகுதியில் இருந்து பெரும் புகை எழும்பியுள்ளது.

அதேவேளை அப்பகுதியில் இராணுவ வாகனம் ஒன்று நின்றதனை மக்கள் அவதானித்துள்ளதுடன், இராணுவத்தினர் குண்டினை செயழிலக்க செய்யும் முயற்சியில் ஈடுபட்ட போது இந்த சத்தம் கேட்டிருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Latest Offers