பயங்கரவாத விசாரணைப் பிரிவு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் இணைப்பு

Report Print Satha in சமூகம்

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பயங்கரவாத விசாரணைப் பிரிவு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் இணைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சேவையின் அவசியம் கருதி பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்னவால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் பயங்கரவாத விசாரணைப் பிரிவு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் இயங்கியுள்ளதுடன், பின்னர் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் அந்தப் பிரிவு அவருக்கு கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

Latest Offers