சட்டவிரோதமாக தங்கம் கடத்தி வந்த நோர்வே பிரஜைகள் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

ஒரு கோடியே பத்து லட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்த நோர்வே நாட்டை சேர்ந்த தந்தையும், மகனும் நேற்றிரவு சுங்க திணைக்களத்தின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 55 வயதான நோர்வேயின் முன்னணி நகை கடை உரிமையாளர் என சுங்க திணைக்களத்தின் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார். சந்தேகநபரின் மகன் 18 வயதானவர் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த சந்தேகநபர்கள் நேற்றிரவு 11.45 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளனர்.

இவர்கள் அணிந்திருந்த காற்சட்டையின் இடுப்பு பட்டியில் தங்க சங்கிலிகள், வலையல்கள், மோதிரங்களை மறைத்து வைத்து எடுத்து வந்துள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து 1.825 கிலோகிராம் தங்கத்தை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இதன்போது கைப்பற்றிய தங்கம் அரசுடமையாக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களுக்கு ஆறு லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் சுங்க திணைக்களத்தின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.