யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட மூவரையும் விடுவிக்கக்கோரி போராட்டம்

Report Print Rakesh in சமூகம்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் மற்றும் பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் ஆகிய மூவரையும் விடுவிக்க கோரி கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் இன்று யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் பல்கலைக்கழக வளாக முன்றலில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நிரபராதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய் உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட மூவர் மீதான வழக்கு நாளை யாழ். நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில், இவர்களின் விடுதலை தொடர்பில் சட்டமா அதிபர் உரிய அறிவுறுத்தலை வழங்க வேண்டும் எனவும் இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.