அனுராதபுரத்தில் கோர விபத்து - பெண்கள் உட்பட மூன்று பேர் பலி

Report Print Satha in சமூகம்

அநுராதபுர - கெக்கிராவ, மடஎட்டிகம பிரதேசத்தில் லொறியுடன், வானொன்று மோதியதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வானில் சென்ற மூன்று பேரே விபத்தில் உயிரிழந்துள்ளதுடன், அவர்களில் இருவர் பெண்கள் என தெரியவருகிறது.

சம்பவத்தில் மாத்தளை பிரதேசத்தை சேர்ந்தவர்களே உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்தவர்கள் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.