நாமல் குமார குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைப்பு

Report Print Steephen Steephen in சமூகம்

ஊழல் எதிர்ப்பு அமைப்பின் பணிப்பாளர் நாமல் குமார மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

நாமல் குமார வரக்காபொல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்ய சென்ற போது நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில தினங்களாக பிரதேசங்கள் சிலவற்றில் ஏற்பட்ட பதற்றமான சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளவே நாமல் குமாரவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவரை தவில மாசோன் பலக்காய தலைவர் அமித் வீரசிங்க, நவ சிங்களே ஜாதிக அமைப்பின் தலைவர் டேன்பியசாத் ஆகியோரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.