யாழ். கொக்குவில் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வீடொன்றில் சோதனை

Report Print Sumi in சமூகம்

யாழ். கொக்குவில், காந்தி லேனில் சந்தேகத்துக்கிடமான வீடு ஒன்றிலிருந்து இராணுவத்தினர் வாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களை மீட்டுள்ளனர்.

அப்பகுதி மக்கள் இராணுவத்தினருக்கு வழங்கிய அறிவித்தலின் அடிப்படையில் இராணுவத்தினரும், சிறப்பு அதிரடிப் படையினரும் இணைந்து இன்று காலை சுற்றிவளைப்பை முன்னெடுத்துள்ளனர்.

வாள்வெட்டுக் குழுவைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படும் ஒருவருடைய வீடே இவ்வாறு சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன், அந்த வீட்டில் உள்ள இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அங்கு வாள் உள்ளிட்ட ஆயுதங்கள் என்பவற்றை உரைப்பையிலிருந்து மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Latest Offers