எதிர்வரும் நான்கு நாட்களுக்கு மதுபான கடைகள் மூடப்பட்டிருக்கும்

Report Print Kamel Kamel in சமூகம்

எதிர்வரும் நான்கு நாட்களுக்கு மதுபான கடைகள் மூடப்பட்டிருக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

நாளைய தினம் முதல் எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் சகல மதுபான கடைகளையும் மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த உத்தரவினை மீறி செயற்படும் மதுபானகடை உரிமையாளர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமான மதுபான விற்பனையில் ஈடுபடும் நபர்களை கைது செய்வதற்காக மதுவரி திணைக்களத்தின் 1200 அதிகாரிகள் நாடு முழுவதிலும் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.