பொறுமையுடன் செயற்படாவிட்டால் பாரிய அழிவுகள் ஏற்படும் - வேடுவர் தலைவர்

Report Print Kamel Kamel in சமூகம்

நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளின் போது அனைத்து தரப்பினரும் மிகவும் பொறுமையுடன் செயற்பட வேண்டுமெனவும், அவ்வாறு இல்லாவிட்டால் பாரிய அழிவுகள் ஏற்படுவதனை தவிர்க்க முடியாது எனவும் வேடுவர் தலைவர் வனஸ்பதி ஊருவரிகே வன்னிலா எத்தோ தெரிவித்துள்ளார்.

தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை தம்மானையில் உள்ள ஆதிவாசிகள் அல்லது வேடுவர்களையும் பாதித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவினால் தங்களது வியாபார நடவடிக்கைகளும் வீழ்ச்சியடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னரும் இவ்வாறான மோசமான சம்பவங்கள் இடம்பெற்ற போதிலும் இம்முறை இடம்பெற்றது போன்று பாரிய அழிவுகள் ஏற்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார் என தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.