தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ள வருவோரின் எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு

Report Print Satha in சமூகம்

நாட்டில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக ஒருநாள் சேவை மூலம் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்வதற்கு வருகை தருவோரின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக, ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளதாக பணிப்பாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

இதற்கமைவாக மேலதிக அதிகாரிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, ஒருநாள் சேவைக்காக வருகைதருவோரின் எண்ணிக்கை 2,500 வரை அதிகரித்துள்ளது.

இதற்கு முன்னர் ஒருநாள் சேவையைப் பெற்றுக்கொள்ள வருவோரின் எண்ணிக்கை 1,200 ஆக காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.