உரப்பையில் மனித எலும்புகள் - நீதிமன்றம் விடுத்த உத்தரவு

Report Print Steephen Steephen in சமூகம்

மாதம்பை மரம்பெட்டை பிரதேசத்தில் ஒரு இடத்தில் போட்டப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட மனித எலும்புகள் சம்பந்தமாக விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சிலாபம் பதில் நீதவான் சாந்த உதயங்க இன்று உத்தரவிட்டுள்ளார்.

சிலாபம் வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிக்கு நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

நேற்று மாலை மாதம்பை பொலிஸார் உரப் பையில் போடப்பட்டிருந்த இந்த மனித எலும்புகளை மீட்டுள்ளனர்.

மனித மண்டையோடும், ஏனைய மனித எலும்புகளும் உரப்பையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.