3 இளைஞர்களை மடக்கி பிடித்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ள பொது மக்கள்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலையில் இன முறுகலை ஏற்படுத்த முயற்சித்த 3 இளைஞர்களை பொது மக்கள் மடக்கி பிடித்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பூம்புகார் வீதியை சேர்ந்த சபீக் முஹம்மத் (24 வயது), பாலையூற்றை சேர்ந்த முகம்மது முஸ்தபா (25 வயது) மற்றும் அதே இடத்திலுள்ள பாலரூபன் டிலக்சன் (20 வயது) ஆகியோர் கைதாகியுள்ளனர்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

மட்கோ - முஹம்மதியா நகரில் உள்ள, அல் மின்ஹாஜ் முஸ்லிம் மகாவித்தியாலயத்திற்குள் சந்தேகநபர்கள் மதிலேறி சென்று பாடசாலை கலைக்கூடத்தை உடைத்து காட்போட்களை சேர்த்து பாடசாலைக்கு தீ வைக்க முயற்சித்துள்ளனர்.

இவர்கள் இன மோதல்களை ஏற்படுத்த முயற்சித்துள்ளதாக மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

இதேவேளை சந்தேகநபர்கள் பயணித்த முச்சக்கரவண்டியை கைப்பற்றியுள்ளதுடன், இன்று திருகோணமலை நீதிமன்றில் சந்தேகநபர்களை ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest Offers