தெஹிவளை வீடு ஒன்றில் சிக்கிய பெருந்தொகை டொலர்! IS அமைப்பினர் அனுப்பியதாக தகவல்

Report Print Vethu Vethu in சமூகம்

தெஹிவளையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, பெருந்தொகை அமெரிக்க டொலர்கள் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த மாதம் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய தெஹிவளை பிரதேச வீடு ஒன்றில் இருந்து 23,500 அமெரிக்க டொலர் மீட்கப்பட்டுள்ளன.

ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய இந்த பணம் சட்ட ரீதியானதா என்பது தொடர்பில் விசாரணை அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதவான் தனூஷா ஜயதுங்க வங்கி முகாமையாளருக்கு நேற்று உத்தரவிட்டுள்ளார்.

முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய, ஐ.எஸ் அமைப்பில் பயிற்சி பெறும் உறவினர்கள் இருவர் அந்த தெஹிவளை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

தற்போது சிரியாவிலுள்ள இருவரும் குறித்த பணத்தை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனை பாதுகாத்துக் கொள்வதற்காக வைக்கப்பட்டுள்ளதாக இருவரது தந்தையான அந்த வீட்டின் உரிமையாளர் பயங்கரவாத விசாரணை பிரிவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டிற்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமையவே குறித்த பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.